Wednesday, 11 August 2010

கடன் அன்பை முறிக்கும்

கடன் அன்பை முறிக்கும் 


காட்சி : 1

அழைப்பு மணி ஓசை கேட்டு கதவை திறந்தாள் பூங்கோதை . வாசலில் சிரித்தபடி நின்றிந்தான் ஸ்ரீதரன் . பரத் இருக்கிறானா?  என்று கேட்ட படி சுவாதீனமாய் உள்ளே வந்தான். 
பரத்தின் பள்ளி தோழன் , இன்று வரை இருவரும் அவ்வளவு நெருக்கம். குளிக்க போயிருக்கார் உக்காருங்க வந்துடுவார் என்று சொன்ன படி கோதை உள்ளே சென்றாள்.
இன்று எப்படியும் அவனிடம் கொடுத்த பணத்தை வாங்க வேண்டும் என்று எண்ணியபடி ஸ்ரீதரன் அங்கிருந்த சோபாவில் உக்கார்ந்தான் . 

தலையை துவட்டியபடி வந்த பரத் இவனை பார்த்த உடன் மலர்ச்சி ஆனான் . வாடா மாப்பிள்ளை எப்படி இருக்க ? என்று கேட்ட படி அவன் அருகில் அமர்ந்தான். ஸ்ரீதர் கொஞ்சம் கடுமையாக முகத்தை வைத்த படி டேய் எனக்கு எப்படா தர போற? என்று கேட்ட ஸ்ரீதரை பார்த்து , மச்சான் உனக்கு இல்லாம யாருக்கு கொடுக்க போறேன், கொஞ்சம் பொறுத்துகடா , நிறைய செலவு வந்துருச்சு இந்த மாசத்துல , உனக்கே தெரியும் வாங்குற சம்பளம் கவரோட எங்க போகுதுன்னுதான்  தெரியல, நானும் உனக்கு கொடுத்துரணும் அப்படின்னு தான் ஒவ்வொரு தடவையும் பாக்குறேன் ஆனா செலவாகுறதை நிறுத்த முடியல, இவ்ளோ நாள் இருந்துட்ட இன்னும் ஒரு வாரம் சம்பளம் வந்துரும் கண்டிப்பா உனக்கு கொடுத்துடுவேன் டா இந்த ஒரு தடவ அட்ஜஸ்ட் பண்ணிகோடா என்று கூறினான் பரத். அடுத்த வாரம் இந்த மாதிரி எல்லாம் கேட்க மாட்டேன் என்று கூறியவாறு ஸ்ரீதர் கிளம்பினான். இவ்ளோ தூரம் நீ எண்டா அலையுறே மாமு , நானே கொண்டு வந்து கொடுக்குறேன் என்றான் பரத். இப்படி தான் போன மாசம் சொன்ன என்ன ஆச்சு?  நீயும் வருவேன்னு நானும் காத்திருந்து நாள் போனது தான் மிச்சம். இனிமே என்னால பொறுத்துக்க முடியாது, என் பொண்டாட்டியும் ஜாடை மாடையா சொல்லி காட்ட ஆரம்பிச்சிட்டா , அவளை சமாதான படுத்த   ஏகத்துக்கும் நான் பொய் சொல்ல வேண்டிருக்கு என்று சலிப்போடு சொன்னான் ஸ்ரீதரன். 
இனிமே உனக்கு அந்த கஷ்டம் இல்லடா மச்சான் கண்டிப்பா கொடுத்திருவேன் என்றான் பரத். ஸ்ரீதர் புலம்பியவாறு கிளம்பினான்.  
இருடா சூடா இட்லி சாப்பிடலாம் என்றான் பரத். 
அதை நீயே சாப்பிடு ,
எனக்கு டைம் ஆச்சு என்றான் ஸ்ரீதர். 

காட்சி : 2 

மருந்து கடையில் சீட்டு கொடுத்து காத்திருந்தான் பரத், தோளில் கை விழுந்ததும் திரும்பி பார்த்தால் ஸ்ரீதர் நின்றிந்தான் ,
டேய் எங்கடா இங்கே ? என்று கேட்டான் பரத் 
ஏதாவது மாத்திரை வேணுமா வாங்கிக்க நம்ம கடைதான் என்றான் பரத் சிரித்த படி, 
வராத வியாதிய வீட்டுக்கு அனுப்பி வைப்ப போல ? எனக்கு எதுவும் வேணாம் , நீ எப்படா கொடுக்க போற அதை சொல்லு என்றான் ஸ்ரீதர் , பரத் பதிலேதும் சொல்லாமல் முகத்தை திருப்பி கொண்டான் . அவன் தோளை தொட்டு திருப்பிய ஸ்ரீதரிடம், என்னடா ஒருத்தன் மருந்து கடைக்கு வந்துருக்கேன் என்னாச்சு கேட்க தோணலை அத விட்டுட்டு  ஈட்டி காரன் மாதிரி பணத்துல குறியா இருக்கியே என்று அங்கலாய்த்தான் பரத். ஸ்ரீதர் மனம் கொஞ்சம் இளகியது , என்னடா ஆச்சு என்றான்? இதை முதல்ல கேட்டு இருக்கலாமில்ல என்றான் பரத், சரி சொல்லுடா என்றவுடன் , அவ இப்ப முழுகாம இருக்காடா போதா குறைக்கு அவளுக்கு உடம்பு பூஞ்சையா இருக்கா மருந்து மாத்திரைனு ஏகத்துக்கும் பட்டியல் போட்டாரு டாக்டரு , என்றான் பரத். இது வேறயா மனதுக்குள் எண்ணியவாறு சரி அத விடு எப்ப வரட்டும் அத சொல்லுடா ? என்றான் ஸ்ரீதர், எண்டா ஒரு சந்தோசமான விஷயம் சொல்லிருக்கேன் அதுக்கு என்னை வாழ்த்து வேணு பார்த்தா கேட்க கூடாத விசயத்த கேட்ட மாதிரி காட்டிக்கிற என்றான் பரத். ஸ்ரீதரும் சரிடா ரொம்ப சந்தோசம் என்றான். அநேகமா அடுத்த வாரம் கிடைக்கும் நிச்சயம் கொடுத்துறேன் சரியா என்று சொன்ன படி , எவ்வளவு ஆச்சு என்று கடைக்காரிடம் கேட்டான், அவரும் 500 சொச்சம் என்றார். உன்கிட்ட எவ்வளவுடா  வச்சிருக்கா என்று கேட்டு கொண்டே, ஸ்ரீதரின் சட்டை பையை துழாவினான், ஸ்ரீதர் கையை  தட்டி விட்ட படி , டேய் என்னை தேவை இல்லாம கொலை காரனா ஆக்காதே  என்றான். நம்ம என்ன அப்பிடியா பழகிருக்கோம் என்றான் பரத் சிரித்து கொண்டே , ஸ்ரீதருக்கு சிரிப்பு வரவில்லை, முறைத்தவாறே கிளம்பினான்.

காட்சி : 3 

பரத் சலூனில் இருந்து வெளியே வந்தான் , ஸ்ரீதர் கடை வாசலில் இவனுக்காக காத்திருந்தான் , நூறு ஆயுசுடா  உனக்கு என்றான் பரத் , போதும்டா இந்த வெட்டி பேச்சு வேணாம் , பணத்த எப்ப கொடுக்க போற அத சொல்லு என்றான் ஸ்ரீதர், பரத் டேய் வர வாரம் கண்டிப்பா கொடுத்துருவேன் , ஊர்ல என்னோட நிலம் ஒண்ணு வித்து இருக்கேன் 
இன்னிக்கி என்ன கிழமை வெள்ளி , சனி ஞாயிறு மாமா வருவாரு , அடுத்த வாரம் நிச்சயமா கொடுத்துருவேன் என்றான் பரத்.

காட்சி :  4 

உயர் தர உணவு விடுதியில் இருந்து வெளியே வந்தான் பரத் , பக்கத்தில் இருந்த பொட்டி கடையில் பீடா வாங்க பணம் கொடுத்தான் , பல் குத்திய படி அங்கிருந்த நாளிதழை வேடிக்கை பார்க்கும் போது யாரோ இவன் பெயர் சொல்லி அழைப்பது போல் இருந்தது ,  திரும்பி பார்த்தான் , எதிர் சாரியில் இருந்து ஸ்ரீதர் இவனை நோக்கி வந்து கொண்டு இருந்தான் , அவனை பார்த்த உடன் பரத்துக்கு மனம் துணுக்குற்றது ! என்ன சொல்வது என்று யோசிக்க ஆரம்பித்தான் , அவன் அருகில் வர வர பரத் மனம் பரபரத்தது , அவசரமாக கிளம்புவது போல் கடிகாரத்தை பார்த்தான், அதற்குள் ஸ்ரீதர் அவனை சமீபித்து விடவே, வேறு வழி இல்லாது அவனை பார்த்து சிரித்தான் , உன்னை நானு போட்டோ பிடிக்க வரல , எப்படா தர போற என்றான் ஸ்ரீதர் , பரத் உடனே கையில் போட்டிருந்த மோதிரத்தை கழட்டி ஸ்ரீதர் கையில் கொடுத்து , இந்தாடா இதை வச்சி பணம் எடுத்துக்கோ என்றான், ஸ்ரீதர் முகம் மாறி போனது, தங்கம் விக்கிற விலையில எதுக்குடா , இதை வச்சி தான் எனக்கு கொடுக்கனுமா? அவ்வளவு கஷ்டமா உனக்கு ? இதை முதல்ல சொல்ல கூடாதா என்றவாறு , மோதிரத்தை திருப்பி கொடுத்தான், பரத்தும் அதை வாங்கி கொண்டு, இல்லடா மச்சான் அவளுக்கு வளைகாப்பு செய்யனும்னு சொல்லிடாங்க அதான், மாமா கொண்டு வந்த பணத்துல தான் அது நடந்தது இல்லைனா அதை உனக்கு கொடுக்கலாமுன்னு தான் நினைச்சிருந்தேன் என்றான். ஸ்ரீதர் பதிலேதும் சொல்லாது கிளம்பி சென்றான். 

காட்சி : 5 

ஸ்ரீதர் மாயண்டியிடம் பரத்தின் போட்டோவை காட்டி , இவன ரெண்டு தட்டு தட்டினா போதும் , மிச்சத்தை நான் பாத்துக்கிறேன் என்றான் , மாயாண்டி பரத்தின் போட்டோவை வாங்கிகொண்டு, என் கைல சொல்லிட்ட இல்ல கவலைய விடு, அவன் போற காலம் வரைக்கும் தழும்பு இருக்கும் என்று கூறினான், ஸ்ரீதர், அப்படி எல்லாம் மாட்டடி அடிக்காதே , அவன் கிட்ட இருந்து நான் பணத்த திருப்பி வாங்கணும் , சரியா என்றவாறு பணத்தை எண்ணி கொடுத்தான் ஸ்ரீதர், நீ போ வாத்தியாரே , நானு பாத்துக்கிறேன் என் வேலை கரெக்டா இருக்கும் என்றான் மாயாண்டி.

காட்சி : 6

கைபேசி துடித்தது , ஸ்ரீதர் துடிப்பை நிறுத்தி விட்டு பேசினான், லைன்ல் மாயாண்டி வந்தான் , வேலை முடிஞ்சது, நம்ம ஏரியா கிட்ட தான் கிடக்கான் போய் பாத்துக்கோ
ரொம்ப முரண்டு பிடிச்சான் கைல பொருள் எடுக்கவேண்டியதா போச்சு என்றான் சாவதானமாக , ஸ்ரீதருக்கு தலை சுத்தியது, தேவை இல்லாமல் புலி வாலை பிடித்த கதை ஆகிவிடுமோ என்று பயம் வந்தது.

காட்சி : 7

பரத் வலியில் துடித்து கொண்டு இருந்தான், உடம்பில் பல இடங்களில் ரத்தம் கொட்டியது,  ஸ்ரீதர் அங்கு வந்தான், அவனை பார்த்ததும்  மனம் பதறியது, ரெண்டு தட்டு தட்ட சொன்னா இப்படி அடிசிருக்கானே என்று மாயாண்டியை சபித்தவாறு பரத்தை கூட்டிக்கொண்டு  கிளினிக் சென்றான். 
கட்டு போட்டு கொண்டு திரும்பும் போது பரத்திடம் என்ன நடந்தது என்று விசாரித்தான் 
பரத், உனக்கு கொடுக்கலாமுன்னு பணத்த பேங்க்ல இருந்து எடுத்துட்டு வந்தேன்டா 
வழில எவனோ ஒருத்தன்   கத்திய காட்டி என்னை அடிச்சிட்டு பணத்த புடுங்கிட்டு போயிட்டாண்டா என்றான் பரத். திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஸ்ரீதர் உணர்ந்தான் . தலை வலி போய்  திருகு வலி வந்த கதையாய் ஸ்ரீதர் தன் விதியை நொந்தவாறு அவனை வீட்டில் விட்டு விட்டு தன் வீட்டிற்கு சென்றான்.

Monday, 9 August 2010

மாய கம்பளம்

மாய கம்பளம் 


தலைமை ஆசிரியர்  தேவசகாயம் தன் மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறு  அனைவரையும் ஒருமுறை பார்த்தார். மாணவ மாணவிகள் அவரையே கூர்ந்து பார்த்தனர்.  அவர் தொண்டையை செருமியவாறு, டேய் பசங்களா இன்னிக்கி நம்ம பள்ளிக்கு  மேஜிக் நிபுணர் அல்போன்சே ராய் வர போறார் , சாயங்காலம்  3 - 4  மணி வரைக்கும் அவர் பல வித்தைகள் செய்து காட்ட போறார் . இதற்கு கட்டணம் 5  ரூபாய் என்று கூறினார். இதை கேட்ட அனைவரும் கை தட்டி தங்களின் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்.  எல்லோரும் ஒழுங்கா அவங்கவங்க  வகுப்புக்கு போங்க என்று  மிரட்டும் தொனியில் சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றார். 

வகுப்பில் அனைவரும் வர போகிற அந்த மாய வித்தை காரனை பற்றி தான் பேசினர். 
கந்தனின் குரல் தான் உரக்க இருந்தது  அவர் இருப்பதை எல்லாம் அப்டியே மறைத்து விடுவார் என்றும் அவருடைய 
மாய வித்தைகளை தான் ஏற்கனவே கண்டுவிட்டதாக ஜம்பம் காட்டினான். அனைவரும் அவனை பொறாமையோடு பார்த்தனர்.  சிலர் அவன் சொல்வதை ஆர்வத்தோடு கேட்டனர். 
இன்னும் சிலர் அவனை தங்கள் அருகாமயில் கூப்பிட்டு உக்கார வைத்து அவனிடம் இருந்து தகவல் திரட்டினர். இவை அனைத்தையும் கேட்டவாறு இருந்த கிருத்திகா எதுவும் சொல்லாது இருந்தாள். படிப்பில் மிக கெட்டிகாரி . முதல் வகுப்பு முதல் அவள் ஐந்தாம்  வகுப்பு வரை ,  எல்லா வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்தாள். 
படிப்பே அவளை கண்டு சற்று மிரண்டுதான் இருந்தது, வகுப்பில் இவள் எழுந்தால் ஆசிரியர் சற்றே மிரள தான் செய்வார், அந்த அளவுக்கு கேள்விகள் சரமாரியாய் அவளிடம் இருந்து வரும்.  அவளை சமாதான படுத்த எல்லா ஆசிரியருமே கொஞ்சம் இல்லை நிறையவே சிரமபடுவார்கள். 

கந்தன் அவளை பார்த்து , இதற்கு முன்னால் இவருடைய மாய காட்சிகளை நீ பார்த்து இருக்கியா என்று கேலியாக கேட்டான். கிருத்திக சற்றும் சளைக்காமல் , அதான் இன்னைக்கி பாக்க போறேன் இல்ல என்றாள். கந்தன் முகம் சுண்டி போனது. 
இவளை எதற்காவது மட்டம் தட்டலாம் என்றால் அவனால் முடியாது நண்பர்களை துணைக்கு அழைத்து கொள்வான், அப்படியும் இவளிடம் வார்த்தை கொடுத்து நன்றாக மூக்கு அறுபட்டு தான் திரும்புவார்கள். 
நேரம் நெருங்க நெருங்க அனைவரும் படபடப்பாய் இருந்தனர், சரியாக 2.30 மணியளவில்  பள்ளிக்கு ஒரு பேருந்து போல பெரிய வண்டி வந்து நின்றது. அந்த வாகனம் முழுதும் பல வண்ணங்கள் தீட்ட பட்டு இருந்தன , பார்பவர்கள் பிரமிக்கும் வண்ணம் அனைத்தும் சித்திரங்கள் வரைய பட்டு இருந்தன. மேஜிக் நிபுணர் அல்போன்சே ராய் வண்டிக்குள் இருந்து இறங்கி வந்தார், தலைமை ஆசிரியர் அவரை வரவேற்று தனது அறைக்கு அழைத்து சென்றார். சிறிது நேரத்தில் எல்லோரையும் பள்ளி மைதானத்திற்கு வர சொல்லி உத்தரவு வந்தது . அங்கு இருக்கும் அரங்கில் தான் மேஜிக் ஷோ நடக்க போவதாக  ஏற்பாடு ஆகி இருந்தது . 
மாணவ மாணவிகள் அனைவரும் வரிசையாக சென்று வகுப்பு வாரியாக அமர்ந்தனர். 

சரியாய் 3 மணியளவில் பளபளக்கும் உடையோடு மேடையில் அல்போன்சே ராய் தோன்றினார்.  தன்னுடைய பேச்சினாலும் தான் செய்ய போகும் மாய வித்தைகள் குறித்து  மிக அழகாய் சொல்லி காட்டினார். அவருடைய கையில் ஒரு சிவப்பு நிற கம்பள துணி இருந்தது, அதை வைத்து தான் அவர் அனைத்தையும் மறைய வைத்தார், மறைந்து போன பொருகளை திருப்பி வர வைத்தார், அனைவரும் கைதட்டி ஆராவாரம் செய்தனர், கிருத்திகா மிக ஆர்வமாய் அவர் செய்யும் அனைத்தையும் கவனமாக பார்த்தாள்.  ஏறக்குறைய நிகழ்ச்சி முடியும் தருவாயில் இருந்தது. கடைசி ஆக அவர் செய்தது அந்தரத்தில்  கத்தி மீது ஒருவரை படுக்க  வைத்தது தான் . மயிர் கூச்செறியும் இந்த நிகழ்ச்சியோடு அவருடைய வித்தைகள் முடிந்தன. அனைவரும் கலைந்து சென்றனர். கிருத்திகா மட்டும் தனியாக அவரிடம் வந்தாள், அவளை கண்டதும், அல்போன்சே ராய் 
சிரித்தவாறு, ஆரம்பத்தில் இருந்து நான் உன்னை கவனிச்சிட்டு தான் இருந்தேன், உன்னோட பார்வை என்னோட கம்பளத்து மேல தான் இருந்தது என்றார்! இதை கேட்ட மாத்திரத்தில், கிருத்திகா சற்றே புன்முறுவலோடு எனக்கு அந்த கம்பளம் கிடைக்குமா என்று கேட்டாள்? அப்படி அவள் கேட்டதும் இடி இடியென சிரித்தார் நிபுணர். இதை வைத்து தான் என்னோட பொழப்பு நடக்குது, இதை கேட்டால் எப்படி தருவது என்றார்.
அப்படி என்றால் எனது வீட்டுக்கு வருவீர்களா என்றாள்? அல்போன்சே ராய் சற்று சிந்தித்தவாறு, சரி வருகிறேன், ஆனால் எனக்கு உன்னுடைய வீடு தெரியாதே என்றார். 
உடனே கிருத்திகா சற்றும் தளராமல்,  தன்னுடைய விலாசத்தை அவருக்கு கொடுத்தாள்.  
அவரும் சிரித்த படியே கட்டாயம் அடுத்த வாரம் வருவதாய் கூறி விட்டு சென்றார்.
இது நடந்து சில நாட்களுக்கு பின் , அல்போன்சே ராய்  நிகழ்சிகள் பல மேடைகளில் நடப்பதாய் விளம்பரங்கள் வந்தன, அவரும் கால நேரம் இல்லாது பல சாகசங்கள் புரிந்து கொண்டு இருந்தார். 
ஒரு நாள் அவருடைய வீட்டில் ஓய்வாக இருக்கும் சமயம், துவைபதற்கு துணி கேட்டு சலவை காரன்  வந்தான், அவனிடம் துணிகளை போட்டு கொண்டு இருந்த அவருடைய மனைவி இவர் இடம் ஒரு குறிப்பு சீட்டு இருப்பதாக கூறி கொடுத்தாள். அதை வாங்கி பார்க்கும்போது, அது பள்ளி மாணவி கிருத்திகா கொடுத்த விலாசம் இருந்தது. அவளுடைய வீட்டிற்கு சென்று வருவோமே என்று நினைத்தவராய், மனைவியிடம் 
தனது சட்டையை எடுத்து வர சொன்னார். விலாசம் தேடி அவர் சென்ற போது கிருத்திகா தோழிகளோடு விளையாடி கொண்டு இருந்தாள். இவரை கண்டதும் அவசரமாய் இவரிடம் ஓடி வந்து வணக்கம் கூறினாள். அவரும் அதை ஏற்று கொண்டு அவளையும் கூட்டி கொண்டு கிருத்திகாவின் வீட்டிற்கு சென்றார். வீடு அப்படி ஒன்றும் பெரிய வீடாக இல்லா விட்டாலும் ஓரளவுக்கு பாந்தமாய் இருந்தது. அம்மாவை கூப்பிட்டு வந்து அவருக்கு அறிமுகம் செய்தாள். கிருத்திகாவின் அம்மாவும் அவரை வரவேற்று உபசரித்தாள் . சிறிது நேரம் கழித்து கிருத்திகா உள் அறையில் இருந்து தன்னுடைய உண்டியலை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள்.
இதுவரை தான் உண்டியலில் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து காசுகளையும் அவருக்கு கொடுத்து விடுவதாய் கூறினாள் கிருத்திகா. அதை கேட்டு அல்போன்சே ராய் ஆச்சர்யம் அடைந்தார் உனக்கு என்ன வேண்டும் கேள் என்று கூறினார். கிருத்திகா சிறிதும் சளைக்காமல் தாங்கள் வைத்துள்ள கம்பளம் வேண்டும் என்று மறுபடியும் கேட்டாள். இந்த முறை அல்போன்சே ராய் சற்று சலனமுற்றார் , இதற்கு தான் என்னை வர சொன்னாயா என்று சற்று கோவமாக கேட்டார். கிருத்திகாவின் முகம் தொட்டால் சிணுங்கி ஆனது. கொஞ்சம் அதிகமாக கோப பட்டு விட்டோமோ என்று வருத்த பட்டார் அல்போன்சே ராய். பின் கொஞ்சம் சாந்தமாய் முகத்தை வைத்து கொண்டு அவளிடம் வாஞ்சையாய் கேட்டார். என்னடா செல்லம் வேணும் உனக்கு? இந்த கம்பளம் தானே  இது தான் எனக்கு எல்லாம் , இது இல்லைனா என்னால மாய வித்தை எல்லாம் காட்ட முடியாது என்று கூறினார். கிருத்திகா அங்கிள் இதை நீங்களே வச்சிகோங்க ஆனா எனக்கு ஒண்ணே  ஒண்ணு  மட்டும் வேணும் அதை கொண்டு வருவீங்களா என்று கேட்டாள்.
ஒன்றும் புரியாது அவளை பார்த்து என்ன வேண்டும் கேள் கொண்டு வருகிறேன் என்றார்!! கிருத்திகா ஓட்டமாய் உள் அறைக்குள் ஓடி சென்று கையில் ஒரு புகை படத்தை கொண்டு வந்தாள்.  அதை அவர் முன் வைத்து விட்டு கண்களில் கண்ணீரோடு என் தந்தை சிறிது காலத்திற்கு முன் காலமாகி விட்டார் அவரை திருப்பி கொண்டு வரமுடியுமா என்று கேட்டு விட்டு குலுங்கி குலுங்கி அழுதாள் , எனக்கு எங்க அப்பா வேணும் அங்கிள், நீங்க இந்த கம்பளத வச்சிதான் எது கேட்டாலும் கொடுக்கும்னு சொன்னீங்க தானே ,  எனக்கு எங்க அப்பா வேணும் என்றாள் பரிதாபமாக அருகில் நின்று கொண்டு இதை கேட்டு கொண்டு இருந்தா கிருத்திகாவின் தாயார் செய்வதறியாது திகைத்தார் , அவருடைய கண்களிலும் கண்ணீர் அருவியாய் கொட்டியது !  இதை கேட்ட மாத்திரத்தில் அல்போன்சே ராய் துணுக்குற்றார் , அவரால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை . எதை கேட்டாலும் கொண்டு வருவதாய் சொன்ன அவரால் அந்த குழந்தையின் தந்தையை கொண்டு வர முடியாது.அவரால் மறைய வைக்க தான் முடியும் என்பதும் இதுவும் ஒரு வித்தை தானே அன்றி உண்மையில் அவரால் இயலாத காரியம் என்பதை உணர்ந்து,  கண்கள் கசிய தலை குனிந்து தன் தோல்வியை அந்த சிறுமியிடம் ஒத்துகொண்டார்.