கடன் அன்பை முறிக்கும்
காட்சி : 1
அழைப்பு மணி ஓசை கேட்டு கதவை திறந்தாள் பூங்கோதை . வாசலில் சிரித்தபடி நின்றிந்தான் ஸ்ரீதரன் . பரத் இருக்கிறானா? என்று கேட்ட படி சுவாதீனமாய் உள்ளே வந்தான்.
பரத்தின் பள்ளி தோழன் , இன்று வரை இருவரும் அவ்வளவு நெருக்கம். குளிக்க போயிருக்கார் உக்காருங்க வந்துடுவார் என்று சொன்ன படி கோதை உள்ளே சென்றாள்.
இன்று எப்படியும் அவனிடம் கொடுத்த பணத்தை வாங்க வேண்டும் என்று எண்ணியபடி ஸ்ரீதரன் அங்கிருந்த சோபாவில் உக்கார்ந்தான் .
தலையை துவட்டியபடி வந்த பரத் இவனை பார்த்த உடன் மலர்ச்சி ஆனான் . வாடா மாப்பிள்ளை எப்படி இருக்க ? என்று கேட்ட படி அவன் அருகில் அமர்ந்தான். ஸ்ரீதர் கொஞ்சம் கடுமையாக முகத்தை வைத்த படி டேய் எனக்கு எப்படா தர போற? என்று கேட்ட ஸ்ரீதரை பார்த்து , மச்சான் உனக்கு இல்லாம யாருக்கு கொடுக்க போறேன், கொஞ்சம் பொறுத்துகடா , நிறைய செலவு வந்துருச்சு இந்த மாசத்துல , உனக்கே தெரியும் வாங்குற சம்பளம் கவரோட எங்க போகுதுன்னுதான் தெரியல, நானும் உனக்கு கொடுத்துரணும் அப்படின்னு தான் ஒவ்வொரு தடவையும் பாக்குறேன் ஆனா செலவாகுறதை நிறுத்த முடியல, இவ்ளோ நாள் இருந்துட்ட இன்னும் ஒரு வாரம் சம்பளம் வந்துரும் கண்டிப்பா உனக்கு கொடுத்துடுவேன் டா இந்த ஒரு தடவ அட்ஜஸ்ட் பண்ணிகோடா என்று கூறினான் பரத். அடுத்த வாரம் இந்த மாதிரி எல்லாம் கேட்க மாட்டேன் என்று கூறியவாறு ஸ்ரீதர் கிளம்பினான். இவ்ளோ தூரம் நீ எண்டா அலையுறே மாமு , நானே கொண்டு வந்து கொடுக்குறேன் என்றான் பரத். இப்படி தான் போன மாசம் சொன்ன என்ன ஆச்சு? நீயும் வருவேன்னு நானும் காத்திருந்து நாள் போனது தான் மிச்சம். இனிமே என்னால பொறுத்துக்க முடியாது, என் பொண்டாட்டியும் ஜாடை மாடையா சொல்லி காட்ட ஆரம்பிச்சிட்டா , அவளை சமாதான படுத்த ஏகத்துக்கும் நான் பொய் சொல்ல வேண்டிருக்கு என்று சலிப்போடு சொன்னான் ஸ்ரீதரன்.
இனிமே உனக்கு அந்த கஷ்டம் இல்லடா மச்சான் கண்டிப்பா கொடுத்திருவேன் என்றான் பரத். ஸ்ரீதர் புலம்பியவாறு கிளம்பினான்.
இருடா சூடா இட்லி சாப்பிடலாம் என்றான் பரத்.
இருடா சூடா இட்லி சாப்பிடலாம் என்றான் பரத்.
அதை நீயே சாப்பிடு ,
எனக்கு டைம் ஆச்சு என்றான் ஸ்ரீதர்.
எனக்கு டைம் ஆச்சு என்றான் ஸ்ரீதர்.
காட்சி : 2
மருந்து கடையில் சீட்டு கொடுத்து காத்திருந்தான் பரத், தோளில் கை விழுந்ததும் திரும்பி பார்த்தால் ஸ்ரீதர் நின்றிந்தான் ,
டேய் எங்கடா இங்கே ? என்று கேட்டான் பரத்
டேய் எங்கடா இங்கே ? என்று கேட்டான் பரத்
ஏதாவது மாத்திரை வேணுமா வாங்கிக்க நம்ம கடைதான் என்றான் பரத் சிரித்த படி,
வராத வியாதிய வீட்டுக்கு அனுப்பி வைப்ப போல ? எனக்கு எதுவும் வேணாம் , நீ எப்படா கொடுக்க போற அதை சொல்லு என்றான் ஸ்ரீதர் , பரத் பதிலேதும் சொல்லாமல் முகத்தை திருப்பி கொண்டான் . அவன் தோளை தொட்டு திருப்பிய ஸ்ரீதரிடம், என்னடா ஒருத்தன் மருந்து கடைக்கு வந்துருக்கேன் என்னாச்சு கேட்க தோணலை அத விட்டுட்டு ஈட்டி காரன் மாதிரி பணத்துல குறியா இருக்கியே என்று அங்கலாய்த்தான் பரத். ஸ்ரீதர் மனம் கொஞ்சம் இளகியது , என்னடா ஆச்சு என்றான்? இதை முதல்ல கேட்டு இருக்கலாமில்ல என்றான் பரத், சரி சொல்லுடா என்றவுடன் , அவ இப்ப முழுகாம இருக்காடா போதா குறைக்கு அவளுக்கு உடம்பு பூஞ்சையா இருக்கா மருந்து மாத்திரைனு ஏகத்துக்கும் பட்டியல் போட்டாரு டாக்டரு , என்றான் பரத். இது வேறயா மனதுக்குள் எண்ணியவாறு சரி அத விடு எப்ப வரட்டும் அத சொல்லுடா ? என்றான் ஸ்ரீதர், எண்டா ஒரு சந்தோசமான விஷயம் சொல்லிருக்கேன் அதுக்கு என்னை வாழ்த்து வேணு பார்த்தா கேட்க கூடாத விசயத்த கேட்ட மாதிரி காட்டிக்கிற என்றான் பரத். ஸ்ரீதரும் சரிடா ரொம்ப சந்தோசம் என்றான். அநேகமா அடுத்த வாரம் கிடைக்கும் நிச்சயம் கொடுத்துறேன் சரியா என்று சொன்ன படி , எவ்வளவு ஆச்சு என்று கடைக்காரிடம் கேட்டான், அவரும் 500 சொச்சம் என்றார். உன்கிட்ட எவ்வளவுடா வச்சிருக்கா என்று கேட்டு கொண்டே, ஸ்ரீதரின் சட்டை பையை துழாவினான், ஸ்ரீதர் கையை தட்டி விட்ட படி , டேய் என்னை தேவை இல்லாம கொலை காரனா ஆக்காதே என்றான். நம்ம என்ன அப்பிடியா பழகிருக்கோம் என்றான் பரத் சிரித்து கொண்டே , ஸ்ரீதருக்கு சிரிப்பு வரவில்லை, முறைத்தவாறே கிளம்பினான்.
காட்சி : 3
பரத் சலூனில் இருந்து வெளியே வந்தான் , ஸ்ரீதர் கடை வாசலில் இவனுக்காக காத்திருந்தான் , நூறு ஆயுசுடா உனக்கு என்றான் பரத் , போதும்டா இந்த வெட்டி பேச்சு வேணாம் , பணத்த எப்ப கொடுக்க போற அத சொல்லு என்றான் ஸ்ரீதர், பரத் டேய் வர வாரம் கண்டிப்பா கொடுத்துருவேன் , ஊர்ல என்னோட நிலம் ஒண்ணு வித்து இருக்கேன்
இன்னிக்கி என்ன கிழமை வெள்ளி , சனி ஞாயிறு மாமா வருவாரு , அடுத்த வாரம் நிச்சயமா கொடுத்துருவேன் என்றான் பரத்.
காட்சி : 4
உயர் தர உணவு விடுதியில் இருந்து வெளியே வந்தான் பரத் , பக்கத்தில் இருந்த பொட்டி கடையில் பீடா வாங்க பணம் கொடுத்தான் , பல் குத்திய படி அங்கிருந்த நாளிதழை வேடிக்கை பார்க்கும் போது யாரோ இவன் பெயர் சொல்லி அழைப்பது போல் இருந்தது , திரும்பி பார்த்தான் , எதிர் சாரியில் இருந்து ஸ்ரீதர் இவனை நோக்கி வந்து கொண்டு இருந்தான் , அவனை பார்த்த உடன் பரத்துக்கு மனம் துணுக்குற்றது ! என்ன சொல்வது என்று யோசிக்க ஆரம்பித்தான் , அவன் அருகில் வர வர பரத் மனம் பரபரத்தது , அவசரமாக கிளம்புவது போல் கடிகாரத்தை பார்த்தான், அதற்குள் ஸ்ரீதர் அவனை சமீபித்து விடவே, வேறு வழி இல்லாது அவனை பார்த்து சிரித்தான் , உன்னை நானு போட்டோ பிடிக்க வரல , எப்படா தர போற என்றான் ஸ்ரீதர் , பரத் உடனே கையில் போட்டிருந்த மோதிரத்தை கழட்டி ஸ்ரீதர் கையில் கொடுத்து , இந்தாடா இதை வச்சி பணம் எடுத்துக்கோ என்றான், ஸ்ரீதர் முகம் மாறி போனது, தங்கம் விக்கிற விலையில எதுக்குடா , இதை வச்சி தான் எனக்கு கொடுக்கனுமா? அவ்வளவு கஷ்டமா உனக்கு ? இதை முதல்ல சொல்ல கூடாதா என்றவாறு , மோதிரத்தை திருப்பி கொடுத்தான், பரத்தும் அதை வாங்கி கொண்டு, இல்லடா மச்சான் அவளுக்கு வளைகாப்பு செய்யனும்னு சொல்லிடாங்க அதான், மாமா கொண்டு வந்த பணத்துல தான் அது நடந்தது இல்லைனா அதை உனக்கு கொடுக்கலாமுன்னு தான் நினைச்சிருந்தேன் என்றான். ஸ்ரீதர் பதிலேதும் சொல்லாது கிளம்பி சென்றான்.
காட்சி : 5
ஸ்ரீதர் மாயண்டியிடம் பரத்தின் போட்டோவை காட்டி , இவன ரெண்டு தட்டு தட்டினா போதும் , மிச்சத்தை நான் பாத்துக்கிறேன் என்றான் , மாயாண்டி பரத்தின் போட்டோவை வாங்கிகொண்டு, என் கைல சொல்லிட்ட இல்ல கவலைய விடு, அவன் போற காலம் வரைக்கும் தழும்பு இருக்கும் என்று கூறினான், ஸ்ரீதர், அப்படி எல்லாம் மாட்டடி அடிக்காதே , அவன் கிட்ட இருந்து நான் பணத்த திருப்பி வாங்கணும் , சரியா என்றவாறு பணத்தை எண்ணி கொடுத்தான் ஸ்ரீதர், நீ போ வாத்தியாரே , நானு பாத்துக்கிறேன் என் வேலை கரெக்டா இருக்கும் என்றான் மாயாண்டி.
காட்சி : 6
கைபேசி துடித்தது , ஸ்ரீதர் துடிப்பை நிறுத்தி விட்டு பேசினான், லைன்ல் மாயாண்டி வந்தான் , வேலை முடிஞ்சது, நம்ம ஏரியா கிட்ட தான் கிடக்கான் போய் பாத்துக்கோ
ரொம்ப முரண்டு பிடிச்சான் கைல பொருள் எடுக்கவேண்டியதா போச்சு என்றான் சாவதானமாக , ஸ்ரீதருக்கு தலை சுத்தியது, தேவை இல்லாமல் புலி வாலை பிடித்த கதை ஆகிவிடுமோ என்று பயம் வந்தது.
காட்சி : 6
கைபேசி துடித்தது , ஸ்ரீதர் துடிப்பை நிறுத்தி விட்டு பேசினான், லைன்ல் மாயாண்டி வந்தான் , வேலை முடிஞ்சது, நம்ம ஏரியா கிட்ட தான் கிடக்கான் போய் பாத்துக்கோ
ரொம்ப முரண்டு பிடிச்சான் கைல பொருள் எடுக்கவேண்டியதா போச்சு என்றான் சாவதானமாக , ஸ்ரீதருக்கு தலை சுத்தியது, தேவை இல்லாமல் புலி வாலை பிடித்த கதை ஆகிவிடுமோ என்று பயம் வந்தது.
காட்சி : 7
பரத் வலியில் துடித்து கொண்டு இருந்தான், உடம்பில் பல இடங்களில் ரத்தம் கொட்டியது, ஸ்ரீதர் அங்கு வந்தான், அவனை பார்த்ததும் மனம் பதறியது, ரெண்டு தட்டு தட்ட சொன்னா இப்படி அடிசிருக்கானே என்று மாயாண்டியை சபித்தவாறு பரத்தை கூட்டிக்கொண்டு கிளினிக் சென்றான்.
கட்டு போட்டு கொண்டு திரும்பும் போது பரத்திடம் என்ன நடந்தது என்று விசாரித்தான்
பரத், உனக்கு கொடுக்கலாமுன்னு பணத்த பேங்க்ல இருந்து எடுத்துட்டு வந்தேன்டா
வழில எவனோ ஒருத்தன் கத்திய காட்டி என்னை அடிச்சிட்டு பணத்த புடுங்கிட்டு போயிட்டாண்டா என்றான் பரத். திருடனுக்கு தேள் கொட்டியது போல் ஸ்ரீதர் உணர்ந்தான் . தலை வலி போய் திருகு வலி வந்த கதையாய் ஸ்ரீதர் தன் விதியை நொந்தவாறு அவனை வீட்டில் விட்டு விட்டு தன் வீட்டிற்கு சென்றான்.
good story... keep rocking...
ReplyDelete