Monday, 9 August 2010

மாய கம்பளம்

மாய கம்பளம் 


தலைமை ஆசிரியர்  தேவசகாயம் தன் மூக்கு கண்ணாடியை சரி செய்தவாறு  அனைவரையும் ஒருமுறை பார்த்தார். மாணவ மாணவிகள் அவரையே கூர்ந்து பார்த்தனர்.  அவர் தொண்டையை செருமியவாறு, டேய் பசங்களா இன்னிக்கி நம்ம பள்ளிக்கு  மேஜிக் நிபுணர் அல்போன்சே ராய் வர போறார் , சாயங்காலம்  3 - 4  மணி வரைக்கும் அவர் பல வித்தைகள் செய்து காட்ட போறார் . இதற்கு கட்டணம் 5  ரூபாய் என்று கூறினார். இதை கேட்ட அனைவரும் கை தட்டி தங்களின் சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்.  எல்லோரும் ஒழுங்கா அவங்கவங்க  வகுப்புக்கு போங்க என்று  மிரட்டும் தொனியில் சொல்லிவிட்டு தனது அறைக்கு சென்றார். 

வகுப்பில் அனைவரும் வர போகிற அந்த மாய வித்தை காரனை பற்றி தான் பேசினர். 
கந்தனின் குரல் தான் உரக்க இருந்தது  அவர் இருப்பதை எல்லாம் அப்டியே மறைத்து விடுவார் என்றும் அவருடைய 
மாய வித்தைகளை தான் ஏற்கனவே கண்டுவிட்டதாக ஜம்பம் காட்டினான். அனைவரும் அவனை பொறாமையோடு பார்த்தனர்.  சிலர் அவன் சொல்வதை ஆர்வத்தோடு கேட்டனர். 
இன்னும் சிலர் அவனை தங்கள் அருகாமயில் கூப்பிட்டு உக்கார வைத்து அவனிடம் இருந்து தகவல் திரட்டினர். இவை அனைத்தையும் கேட்டவாறு இருந்த கிருத்திகா எதுவும் சொல்லாது இருந்தாள். படிப்பில் மிக கெட்டிகாரி . முதல் வகுப்பு முதல் அவள் ஐந்தாம்  வகுப்பு வரை ,  எல்லா வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்தாள். 
படிப்பே அவளை கண்டு சற்று மிரண்டுதான் இருந்தது, வகுப்பில் இவள் எழுந்தால் ஆசிரியர் சற்றே மிரள தான் செய்வார், அந்த அளவுக்கு கேள்விகள் சரமாரியாய் அவளிடம் இருந்து வரும்.  அவளை சமாதான படுத்த எல்லா ஆசிரியருமே கொஞ்சம் இல்லை நிறையவே சிரமபடுவார்கள். 

கந்தன் அவளை பார்த்து , இதற்கு முன்னால் இவருடைய மாய காட்சிகளை நீ பார்த்து இருக்கியா என்று கேலியாக கேட்டான். கிருத்திக சற்றும் சளைக்காமல் , அதான் இன்னைக்கி பாக்க போறேன் இல்ல என்றாள். கந்தன் முகம் சுண்டி போனது. 
இவளை எதற்காவது மட்டம் தட்டலாம் என்றால் அவனால் முடியாது நண்பர்களை துணைக்கு அழைத்து கொள்வான், அப்படியும் இவளிடம் வார்த்தை கொடுத்து நன்றாக மூக்கு அறுபட்டு தான் திரும்புவார்கள். 
நேரம் நெருங்க நெருங்க அனைவரும் படபடப்பாய் இருந்தனர், சரியாக 2.30 மணியளவில்  பள்ளிக்கு ஒரு பேருந்து போல பெரிய வண்டி வந்து நின்றது. அந்த வாகனம் முழுதும் பல வண்ணங்கள் தீட்ட பட்டு இருந்தன , பார்பவர்கள் பிரமிக்கும் வண்ணம் அனைத்தும் சித்திரங்கள் வரைய பட்டு இருந்தன. மேஜிக் நிபுணர் அல்போன்சே ராய் வண்டிக்குள் இருந்து இறங்கி வந்தார், தலைமை ஆசிரியர் அவரை வரவேற்று தனது அறைக்கு அழைத்து சென்றார். சிறிது நேரத்தில் எல்லோரையும் பள்ளி மைதானத்திற்கு வர சொல்லி உத்தரவு வந்தது . அங்கு இருக்கும் அரங்கில் தான் மேஜிக் ஷோ நடக்க போவதாக  ஏற்பாடு ஆகி இருந்தது . 
மாணவ மாணவிகள் அனைவரும் வரிசையாக சென்று வகுப்பு வாரியாக அமர்ந்தனர். 

சரியாய் 3 மணியளவில் பளபளக்கும் உடையோடு மேடையில் அல்போன்சே ராய் தோன்றினார்.  தன்னுடைய பேச்சினாலும் தான் செய்ய போகும் மாய வித்தைகள் குறித்து  மிக அழகாய் சொல்லி காட்டினார். அவருடைய கையில் ஒரு சிவப்பு நிற கம்பள துணி இருந்தது, அதை வைத்து தான் அவர் அனைத்தையும் மறைய வைத்தார், மறைந்து போன பொருகளை திருப்பி வர வைத்தார், அனைவரும் கைதட்டி ஆராவாரம் செய்தனர், கிருத்திகா மிக ஆர்வமாய் அவர் செய்யும் அனைத்தையும் கவனமாக பார்த்தாள்.  ஏறக்குறைய நிகழ்ச்சி முடியும் தருவாயில் இருந்தது. கடைசி ஆக அவர் செய்தது அந்தரத்தில்  கத்தி மீது ஒருவரை படுக்க  வைத்தது தான் . மயிர் கூச்செறியும் இந்த நிகழ்ச்சியோடு அவருடைய வித்தைகள் முடிந்தன. அனைவரும் கலைந்து சென்றனர். கிருத்திகா மட்டும் தனியாக அவரிடம் வந்தாள், அவளை கண்டதும், அல்போன்சே ராய் 
சிரித்தவாறு, ஆரம்பத்தில் இருந்து நான் உன்னை கவனிச்சிட்டு தான் இருந்தேன், உன்னோட பார்வை என்னோட கம்பளத்து மேல தான் இருந்தது என்றார்! இதை கேட்ட மாத்திரத்தில், கிருத்திகா சற்றே புன்முறுவலோடு எனக்கு அந்த கம்பளம் கிடைக்குமா என்று கேட்டாள்? அப்படி அவள் கேட்டதும் இடி இடியென சிரித்தார் நிபுணர். இதை வைத்து தான் என்னோட பொழப்பு நடக்குது, இதை கேட்டால் எப்படி தருவது என்றார்.
அப்படி என்றால் எனது வீட்டுக்கு வருவீர்களா என்றாள்? அல்போன்சே ராய் சற்று சிந்தித்தவாறு, சரி வருகிறேன், ஆனால் எனக்கு உன்னுடைய வீடு தெரியாதே என்றார். 
உடனே கிருத்திகா சற்றும் தளராமல்,  தன்னுடைய விலாசத்தை அவருக்கு கொடுத்தாள்.  
அவரும் சிரித்த படியே கட்டாயம் அடுத்த வாரம் வருவதாய் கூறி விட்டு சென்றார்.
இது நடந்து சில நாட்களுக்கு பின் , அல்போன்சே ராய்  நிகழ்சிகள் பல மேடைகளில் நடப்பதாய் விளம்பரங்கள் வந்தன, அவரும் கால நேரம் இல்லாது பல சாகசங்கள் புரிந்து கொண்டு இருந்தார். 
ஒரு நாள் அவருடைய வீட்டில் ஓய்வாக இருக்கும் சமயம், துவைபதற்கு துணி கேட்டு சலவை காரன்  வந்தான், அவனிடம் துணிகளை போட்டு கொண்டு இருந்த அவருடைய மனைவி இவர் இடம் ஒரு குறிப்பு சீட்டு இருப்பதாக கூறி கொடுத்தாள். அதை வாங்கி பார்க்கும்போது, அது பள்ளி மாணவி கிருத்திகா கொடுத்த விலாசம் இருந்தது. அவளுடைய வீட்டிற்கு சென்று வருவோமே என்று நினைத்தவராய், மனைவியிடம் 
தனது சட்டையை எடுத்து வர சொன்னார். விலாசம் தேடி அவர் சென்ற போது கிருத்திகா தோழிகளோடு விளையாடி கொண்டு இருந்தாள். இவரை கண்டதும் அவசரமாய் இவரிடம் ஓடி வந்து வணக்கம் கூறினாள். அவரும் அதை ஏற்று கொண்டு அவளையும் கூட்டி கொண்டு கிருத்திகாவின் வீட்டிற்கு சென்றார். வீடு அப்படி ஒன்றும் பெரிய வீடாக இல்லா விட்டாலும் ஓரளவுக்கு பாந்தமாய் இருந்தது. அம்மாவை கூப்பிட்டு வந்து அவருக்கு அறிமுகம் செய்தாள். கிருத்திகாவின் அம்மாவும் அவரை வரவேற்று உபசரித்தாள் . சிறிது நேரம் கழித்து கிருத்திகா உள் அறையில் இருந்து தன்னுடைய உண்டியலை எடுத்து வந்து அவரிடம் கொடுத்தாள்.
இதுவரை தான் உண்டியலில் சேர்த்து வைத்திருக்கும் அனைத்து காசுகளையும் அவருக்கு கொடுத்து விடுவதாய் கூறினாள் கிருத்திகா. அதை கேட்டு அல்போன்சே ராய் ஆச்சர்யம் அடைந்தார் உனக்கு என்ன வேண்டும் கேள் என்று கூறினார். கிருத்திகா சிறிதும் சளைக்காமல் தாங்கள் வைத்துள்ள கம்பளம் வேண்டும் என்று மறுபடியும் கேட்டாள். இந்த முறை அல்போன்சே ராய் சற்று சலனமுற்றார் , இதற்கு தான் என்னை வர சொன்னாயா என்று சற்று கோவமாக கேட்டார். கிருத்திகாவின் முகம் தொட்டால் சிணுங்கி ஆனது. கொஞ்சம் அதிகமாக கோப பட்டு விட்டோமோ என்று வருத்த பட்டார் அல்போன்சே ராய். பின் கொஞ்சம் சாந்தமாய் முகத்தை வைத்து கொண்டு அவளிடம் வாஞ்சையாய் கேட்டார். என்னடா செல்லம் வேணும் உனக்கு? இந்த கம்பளம் தானே  இது தான் எனக்கு எல்லாம் , இது இல்லைனா என்னால மாய வித்தை எல்லாம் காட்ட முடியாது என்று கூறினார். கிருத்திகா அங்கிள் இதை நீங்களே வச்சிகோங்க ஆனா எனக்கு ஒண்ணே  ஒண்ணு  மட்டும் வேணும் அதை கொண்டு வருவீங்களா என்று கேட்டாள்.
ஒன்றும் புரியாது அவளை பார்த்து என்ன வேண்டும் கேள் கொண்டு வருகிறேன் என்றார்!! கிருத்திகா ஓட்டமாய் உள் அறைக்குள் ஓடி சென்று கையில் ஒரு புகை படத்தை கொண்டு வந்தாள்.  அதை அவர் முன் வைத்து விட்டு கண்களில் கண்ணீரோடு என் தந்தை சிறிது காலத்திற்கு முன் காலமாகி விட்டார் அவரை திருப்பி கொண்டு வரமுடியுமா என்று கேட்டு விட்டு குலுங்கி குலுங்கி அழுதாள் , எனக்கு எங்க அப்பா வேணும் அங்கிள், நீங்க இந்த கம்பளத வச்சிதான் எது கேட்டாலும் கொடுக்கும்னு சொன்னீங்க தானே ,  எனக்கு எங்க அப்பா வேணும் என்றாள் பரிதாபமாக அருகில் நின்று கொண்டு இதை கேட்டு கொண்டு இருந்தா கிருத்திகாவின் தாயார் செய்வதறியாது திகைத்தார் , அவருடைய கண்களிலும் கண்ணீர் அருவியாய் கொட்டியது !  இதை கேட்ட மாத்திரத்தில் அல்போன்சே ராய் துணுக்குற்றார் , அவரால் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை . எதை கேட்டாலும் கொண்டு வருவதாய் சொன்ன அவரால் அந்த குழந்தையின் தந்தையை கொண்டு வர முடியாது.அவரால் மறைய வைக்க தான் முடியும் என்பதும் இதுவும் ஒரு வித்தை தானே அன்றி உண்மையில் அவரால் இயலாத காரியம் என்பதை உணர்ந்து,  கண்கள் கசிய தலை குனிந்து தன் தோல்வியை அந்த சிறுமியிடம் ஒத்துகொண்டார்.

4 comments:

  1. wt to say? no words very nice.............

    ReplyDelete
  2. excellent flow of words and thoughts...plz keep writing Jay... you can do wonders!!

    ReplyDelete
  3. Maaya Kambalam -Touching story. No one else in this world is a magician except the almighty.

    ReplyDelete