மண்ணுளி சிதறல்கள்
காலையில் இருந்தே மனம் அலை பாய ஏதேதோ சிந்தனைகள்.. மனம் வெறுமையை சுவைக்க தொடங்கியது. சுமையாய் மனது கனத்து போய் இருந்தது. கடந்து போன காலங்களை கடிகார முட்களை திருப்புவது போல் திருப்பி விட மனம் பிரயாசைபட்டது. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று சொல்வது பொய்யோ என்று நினைக்க தோன்றியது. இவையெல்லாம் கணவாய் இருக்க கூடாதா என்று மனம் கெஞ்ச தொடங்கியது.
எல்லாம் ஆயிற்று . என்னுடன் பயணித்திருந்த என் சகோதரன் மரித்து போனான்.
மற்றவர்களுக்கு அவனுடைய மரணம் ஒரு செய்தி தான். என்னை பொறுத்த வரை என் வாழ்வின் மிக பெரிய நிகழ்வாய் ஆனது. எல்லோரும் நல்ல விஷயங்கள் அடிகடி நடக்க வேண்டும் என்று தான் பிரார்த்தனை செய்வார்கள்.
இதனை செய்த அந்த ஆண்டவன் என்னையும் எடுத்து கொண்டால் மிகவும் நலமாய் இருக்கும். என்னிடம் இருந்து பிரித்து விட்டு ஏதுமே நடவாது போல் மௌனமாய் இருக்கிறான். என்னை இப்படி சோதித்து பார்க்க அவன் எத்தனை நாள் யோசித்திருப்பானோ ?
காலம் மிக வேகமாய் ஓடுவதாய் தோன்றியது. நேற்று நடந்தது போல இருக்கிறது. மனம் இளம் பிராயத்தை நோக்கி பின்னோக்கி ஓடியது. அவனுக்கும் எனக்கும் இடைவெளி இரண்டு வருடம் தான் ,
இருவரும் ஒருசேர பார்த்தால் இரட்டை பிறவி போல் தெரிவோம்.
ஒரே போர்வையில் எல்லை சண்டை போட்டதாகட்டும் .
ஒரே படுக்கையில் மூச்சா போய்விட்டு ஒருவரை ஒருவர் கோள் சொல்லி கொண்டு சண்டை போட்டு கொள்வதில் இருந்து ,
இதில் என் அண்ணன் முரளி சமர்த்தன் , எதுவும் பேசாமல் என்னை மாட்டி விட்டு விட்டு நமட்டு சிரிப்புடன் சென்று விடுவான்.
இருவரும் ஒருசேர பார்த்தால் இரட்டை பிறவி போல் தெரிவோம்.
ஒரே போர்வையில் எல்லை சண்டை போட்டதாகட்டும் .
ஒரே படுக்கையில் மூச்சா போய்விட்டு ஒருவரை ஒருவர் கோள் சொல்லி கொண்டு சண்டை போட்டு கொள்வதில் இருந்து ,
இதில் என் அண்ணன் முரளி சமர்த்தன் , எதுவும் பேசாமல் என்னை மாட்டி விட்டு விட்டு நமட்டு சிரிப்புடன் சென்று விடுவான்.
நானும் அவனும் ஒரே பள்ளியில் அடுத்தடுத்த வகுப்பில் இருப்போம். எதுவாக இருந்தாலும் என்னை தான் கூப்பிட்டு அனுப்புவார்கள். காலையில் கடவுள் வாழ்த்து பாடுவதில் இருந்து , உறுதி மொழி கூறி வகுப்பிற்கு போன பிறகு எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் எங்கள் இருவரின் தலை தான் உருளும். சமயத்தில் அவனுக்கு துணையாக நானும் முட்டிகால் போட்டு இருக்கிறேன் .
அதுவும் எங்கள் குடும்பம் வேறு மெத்த படித்தவர்கள் அதிகம். அதனால் எங்கள் மீது கரிசனம் வேறு ,
அதுவும் எங்கள் குடும்பம் வேறு மெத்த படித்தவர்கள் அதிகம். அதனால் எங்கள் மீது கரிசனம் வேறு ,
முரளிக்கு கணக்கு என்றாலே காத தூரம் ஓடுவான். அவன் ஓட்டத்தை ஈடு செய்வது போல் நானும் கூடவே ஓடுவேன். எனக்கும் கணக்கு பிடிக்காது. ஆனால் எங்கள் வீட்டில் கட்டுப்பாடு அதிகம். கணக்கு பயிற்சி என்ற பெயரில்
ஒரு நாளைக்கு இத்தனை கணக்கு போட்டால் தான் சாப்பாடு என்று வேறு
எதோ ராணுவ பயிற்சியை மேற் கொள் காட்டி விடுவார்கள்.
இதை எல்லாம் கூட சகித்து கொள்ளலாம் ஆனால்
கோடை விடுமுறை எதற்கு விடுகிறார்கள் ? ஒரு வருடம் படித்து கொஞ்சம் ஓய்விற்கு தானே?
இதை எல்லாம் கூட சகித்து கொள்ளலாம் ஆனால்
கோடை விடுமுறை எதற்கு விடுகிறார்கள் ? ஒரு வருடம் படித்து கொஞ்சம் ஓய்விற்கு தானே?
ஆனால் அப்போது தான் எங்கள் வீட்டில் ஏதோ பரீட்சைக்கு படிக்க சொல்வது போல் . ,
எல்லா வருட தேர்வு வினாத்தாளை சேர்த்து வைத்து மொத்தமாய் பயிற்சி எடுப்பார்கள்.
அப்போதெல்லாம் எனக்கு நீரோ மன்னன் தான் நினைவுக்கு வருவான். ஏனெனில் அவன் ஒருவன் தான் அரண்மனை எரியும் போது பிடில் வாசித்தான் என்று கூறுவார்கள். சரித்திரத்தில் அவன் பெயர் நிலைத்து நின்றதற்கு அவன் செய்கை ஒரு காரணம். எனக்கும் அது போல் தான் தோன்றும்.
எல்லா வருட தேர்வு வினாத்தாளை சேர்த்து வைத்து மொத்தமாய் பயிற்சி எடுப்பார்கள்.
அப்போதெல்லாம் எனக்கு நீரோ மன்னன் தான் நினைவுக்கு வருவான். ஏனெனில் அவன் ஒருவன் தான் அரண்மனை எரியும் போது பிடில் வாசித்தான் என்று கூறுவார்கள். சரித்திரத்தில் அவன் பெயர் நிலைத்து நின்றதற்கு அவன் செய்கை ஒரு காரணம். எனக்கும் அது போல் தான் தோன்றும்.
ஆனாலும் அது நடைமுறையில் முடியாது.. நானும் மன்னன் அல்லவே. எங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருகை மிக பெரிய வரப்ரசாதம் . அவர்கள் வந்தால் எங்களுக்கு சிறிது இடைவேளை இந்த தொல்லையில் இருந்து., இதற்காகவே யாராவது வர வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்தனை செய்த காலங்களும் உண்டு. அதிலும் வருபவர்கள் எங்களுக்கு சாதகமாய் இருத்தல் சுகம்.
இப்படி இருந்த கால கட்டத்தில் ஒரு நாள், தூரத்து உறவினர் ஒருவர் மரித்ததை தொடர்ந்து எங்கள் வீட்டின் ராஜாவும் ராணியும் வெளியூர் பயணித்தார்கள் . எங்களுக்கு ஒரே கொண்டாட்டம் .ஆனால் அதுவும் சிறிது நேரம் தான் நீடித்தது . காரணம் அவர்கள் வரும் சமயம் நாங்கள் இத்தனை பாடங்கள் படித்து முடித்து இருக்க வேண்டும் என்று கட்டளை. இதை கண்காணிக்க எனது அக்காவை நியமனம் செய்தார்கள். சொல்லவே வேணாம் நல்ல நேரத்தில் எங்களை பாடாய் படுத்தி எடுக்கும் என் அக்கா இப்போது சொல்லாமலே ஹிட்லர் புன்னகை பூத்தார். நான் ஹிட்லரை நேரில் கண்டதில்லை
ஆனால் என் அக்காவை உருவக படுத்தி பார்த்தால் பெரிய வித்தியாசம் ஒன்றும் தெரியவில்லை. ஆண்பால் /பெண்பால் வேற்றுமை தவிர.
எனக்கும் என் அண்ணன் முரளிக்கும் வெளியே சென்று பட்டம் விட வேண்டும் என்று கொள்ளை ஆசை. பட்டம் செய்து வீட்டிற்கு கீழே உள்ள படியின் ரகசிய இடத்தில வைத்தாயிற்று. ஆனால் போக முடியாத வாறு எங்களை பாடம் படிக்க சொல்லும் அக்காவை எப்படி சமாளிப்பது? அதுவே ஒரு மிக பெரிய கேள்வியாய் இருந்தது. இப்போது இருக்கும் வசதிகள் அப்போது எது?
என்ன சொல்லி தப்பி செல்வது.? எனது அக்காவிற்கு நாவல் படிக்கும் பழக்கம் இருந்தது . அதை சாக்காய் வைத்து கிளம்பலாம் என்று இருவருமே திட்டம் போட்டோம் . அக்கா எங்களை அவளது தோழி வீட்டிற்கு அனுப்பி புத்தகம் வாங்கி வர சொன்னார்கள் . ஆனால் விதி அதன் சதியை செய்தது . அக்கா எங்களை அவளது தோழி வீட்டிற்கு அனுப்ப சம்மதித்தாள், ஆனால் எங்களில் ஒருவர் தான் செல்லவேண்டும் என்ற ஒரு நிர்பந்தத்தோடு? என்ன செய்வது ? எங்களுக்குள் சண்டை மூண்டது. அக்கா தனது பிரமாஸ்திரத்தை எடுத்தாள் . இருவருமே செல்ல வேண்டாம் என்று கூறி விட்டாள். மீண்டும் நாங்கள் சமாதானமாகி
புதிதாய் ஒரு வேலையை நாங்களே உருவாக்கினோம் . எங்கள் வீட்டிற்கு அருகாமையில் வயல் வரப்பு இருப்பதால் கரிப்பான் செடிகள் முளைத்து இருக்கும், அதை நாங்கள் பிடுங்கி வருகிறோம் என்று கூறி விட்டு சிட்டாய் பறந்தோம் பட்டம் விடுவதற்கு.
நேரம் போனது தெரியாமல் நாங்கள் விளையாடி கொண்டு இருந்தோம். சூரியன் எங்களுக்கு டாட்டா காட்டி விட்டு சென்று விட்டான். அப்போது தான் எங்களுக்கு நேரமாகி போனது தெரிந்தது. போதா குறைக்கு முரளியின் பட்டம் அறுந்து போனது அதை எடுக்க நாங்கள் காடு மலை எல்லாம் கடந்து படத்தில் காட்டுவது போல ஏக ரகளை செய்து அதை எடுத்து கொண்டு வந்து விட்டோம்.. அப்புறம் தான் அதன் விளைவு தெரிந்தது. நாங்கள் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் , ஒரு பையனை அழைத்து கொண்டு நடுத்தர வயதில் ஒரு பெண்மணி எங்கள் வீட்டின் கதவை தட்டினார். கூட வந்த பையனை பார்த்த உடன் எனக்கு எல்லாம் விளங்கி விட்டது. அவன் தலையில் கட்டு கட்டி இருந்தான். உபயம் எனது அண்ணன் முரளி. பட்டம் அறுந்து போன ஆத்திரத்தில் கல்லை எடுத்து இவனை நோக்கி எறிந்தான் , அவ்வளவு தான் எனக்கு தெரியும் .. மற்றவை அந்த அம்மையார் வந்த உடன் மொத்தமாய் விளங்கியது. விசாரணை ஆரம்பமானது. அந்த அம்மா சொல்ல சொல்ல எனது அக்காவின் முகம் அஷ்ட கோணல் ஆனது. எனக்கு என் தலையை பிய்த்து பின்னால் வைத்தது போல தோன்றியது. முடிவாய் அக்கா அவர்களை சமாதான படுத்தி அனுப்பி விட்டு எங்கள் இருவரையும் ஒருவரை ஒருவர் காதை பிடித்து கொள்ள செய்து தோப்புகரணம் போட சொன்னாள். அத்தோடு முடிந்தது என்று தப்பு கணக்கு (?) போட்டோம். எங்கள் அம்மா அப்பா வந்த உடன், இடம் பொருள் ஏவல் இல்லாமல் மொத்தத்தையும் இரத்தின சுருக்கமாய் சொன்னாள். எங்கள் வீட்டில் ஒரு சம்பிரதாயம் உண்டு . நாங்கள் தலை வாரும் நிலை கண்ணாடியின் பின்புறத்தில் நீண்ட ஒரு பிரம்பு உண்டு .
சிவன் பிரம்படி பட்டு புட்டுக்கு மண் சுமந்தான் என்பதால் எங்களையும் சிவனாக பார்த்தார் என் தந்தை. சும்மா சொல்ல கூடாது அடி ஒவ்வொன்றும் சுளீர் சுளீர் என்று சத்தத்தோடு விழும். இரண்டு நாளைக்கு வெளியில் செல்ல சங்கோசமாய் இருக்கும் அடி அனைத்தும் முட்டிக்கு கீழ் தான் , அது வரையில் சந்தோசம்/ உப்பிய அப்பமாய் காலில் அடி வாங்கிய தழும்பு தெரியும்.. நெற்றி கண் இருந்தால் அனைவரையும் பொசுக்கி விட மனது ஆசை படும் . எல்லாம் ஆசையோடு சரி.
ஆனால் எங்கள் தந்தை நாங்கள் தூங்கிய பிறகு அடித்ததற்கு வருத்த பட்டு எங்கள் கால்களுக்கு எண்ணெய் போட்டு நீவி விடுவார். சமயத்தில் கண்ணீர் கசிந்தும் இருக்கிறார். இவையெல்லாம் எனது தாய் சொல்ல கேள்வி பட்டு இருக்கிறோம்..
வருடங்கள் மாதங்களாகி, மாதங்கள் வாரங்களாகி, வாரங்கள் நாட்களாகி , நாட்கள் மணிகளாகி , மணிகள் நிமிடங்களாக ஓடிய ஓட்டத்தில் இப்போது நாங்கள் எங்கள் வயோதிகத்தை சுவைக்க ஆரம்பித்து விட்டோம் ஆனால் சின்ன சின்ன சந்தோசங்களை தொலைத்து விட்டு இன்றும் ஓடி கொண்டிருக்கிறோம் சேணம் கட்டிய குதிரையாக...
Really childwood life is unforgetable to all........
ReplyDelete