அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
மேரி.... மேரி... கத்திகொண்டே ஓடி வந்தான் ராஜு. திரும்பி நின்று தலையை சாய்த்து பார்த்தாள் மேரி. அவள் தலை சாய்த்து பார்த்தாலே ஒரு அழகு தான். ஈறுகள் தெரிய அழகாய் சிரிப்பாள். பல் வரிசையை வைத்து பற்களை எண்ணிவிடலாம். ராஜு அவள் அருகில் வந்து "ரெண்டு நாளா கணக்கு சொல்லி தரவே இல்ல" பரீட்சை வேற வருது என்றான். அவன் தலையில் நறுக்கென்று "கொட்டினாள்". நீ வராம என்ன எண்டா குத்தம் சொல்லுறே என்றாள் . ராஜு தலையை சொறிந்தவாறு சிரித்தான். அவள் சொல்வதும் உண்மைதான். இவன் போகாமல் அவளை குற்றம் சொன்னால் யாருக்கு தான் கோவம் வராது. மேரியை முதன் முதலில் பார்க்கும்போதே ராஜுக்கு பிடித்து விட்டது. அவள் அவனை விட ஒரு வருடம் பெரியவள். அவள் வீட்டிற்கு அருகில் குடி வந்து கடந்த ஆறு மாதங்களில் அவளோடு நன்றாய் ஒட்டி கொண்டான். அவள் இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு தயாராகிறாள் . ராஜு ஒன்பதாம் வகுப்பு படிக்கிறான். ராஜுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து கணக்கு என்றாலே கொஞ்சம் உதறும். அப்போதிருந்து அவன் மற்ற பாடங்களில் நல்ல மார்க் எடுத்தாலும் கணக்கில் மட்டும் ஜஸ்ட் பாஸ் தான். ராஜுவின் அம்மாவும் அவனுக்கு வெண்டைக்காய் சமைத்து போட்டாலும் சரி. மெமரி பிளஸ் வாங்கி கொடுத்தாலும் சரி. கணக்கு மட்டும் இவனிடம் நெருக்கமாய் வரவே இல்லை. பிள்ளையாரை வேண்டிக்க சொல்லியும் ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்துவதாய் வேண்ட சொல்லியும் பார்த்தாயிற்று. ஆனால் அன்று மட்டும் வடையும் / பிள்ளையாருக்கு செய்த கொழுகட்டையும் கிடைத்தது சாப்பிடுவதற்கு ...ஆனால் கணக்கு? இந்த சமயத்தில் தான் ராஜு வின் அப்பா தரகு முறையில் இந்த வீட்டிற்கு வந்தார். ராஜுவிற்கு பள்ளி கொஞ்சம் தூரம் தான் . ஆனால் அருகில் இருந்த மேரி வீட்டில் தான் முதல் முதலில் பேசினார் அப்பா. மேரியின் அப்பாவும் அவளது அண்ணனும் பறவைகள் சுடும் துப்பாக்கிகள் செய்பவர்கள் . எனது தந்தையும் போலீஸ் லாகாவில் பணி புரிவதால் அவரிடம் கொஞ்சம் மரியாதை ஜாஸ்தி . அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ராஜுவிற்கு இதெல்லாம் விட மேரி , அவளிடம் பேசிய முதல் வார்த்தையே நீ நல்லா படிப்பியா? அவள் தலையை சாய்த்து நன்றாய் படிப்பதை சொன்னாள் , அப்போதே அவனுக்கு அவளை பிடித்து போனது. அதற்கு பிறகு பள்ளி செல்லும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களும் அவளிடம் தான் கழிந்தன. மேரி அழகாய் குச்சி விளையாட்டு விளையாடுவாள். இதற்காக வீட்டிற்கு பின்னால் இருக்கும் தென்னை மரத்தில் இருந்து புது தென்னம் குச்சி கொண்டு விளையாடுவாள். அவளோடு இவனும் சேர்ந்து கொள்வான். அது தவிர அழகாய் கோலம் போடுவாள். அவளது அண்ணன் நிர்மல் கோவக்காரன் தான் ஆனாலும் அதை இவளிடம் காட்டுவதில்லை. இவள் மீது அதீத பாசம் உண்டு. அவளது அப்பா மரியம் தாஸ் மாலையானால் குடித்து விட்டு திட்டி கொண்டு இருப்பார். யாரை திட்டுகிறார் என்று ஒருநாளும் விளங்கவில்லை. மேரிக்கு அம்மா கிடையாது. ராஜுவிற்கு கணக்கு வரவில்லை என்றதும் மேரி தானே முன் வந்து சொல்லி கொடுப்பதை சொன்னாள். அதை கேட்டதும் சாட்சாத் அந்த சரஸ்வதி தேவியே நேரில் வந்து வரம் கொடுத்ததாய் புளாங்கிதம் அடைந்தான். கணக்கு மேல் இருந்த வெறுப்பு எங்கு சென்றது என்றே தெரியவில்லை. நமக்கு பிடித்தவர்கள் சொல்லி கொடுப்பதனால் கணக்கு என்ன ... அது எதுவாய் இருந்தாலும் பிடித்து போகும். ராஜுவிற்கு கணக்கு பிடித்து போனது விந்தை இல்லை. அதை பற்றி தான் புகார் சொல்லி கொண்டு இருந்தான். மேரியும் அதற்கு நன்றாகவே பதில் கொடுத்தாள். பள்ளி விட்டு வந்த உடன சந்தியாவந்தனம் செய்துவிட்டு. அம்மா தரும் பூஸ்ட் குடித்துவிட்டு நேராக அவளது வீட்டிற்கு சென்று விடுவான். அதற்கு பிறகு சரியாக அப்பா வரும் சமயம் தான் வீட்டிற்குள் வருவான். அம்மா ஒருமுறை மேரியிடம் என் மகனை தத்து எடுத்துகொண்டாயா என்று கேட்டு விட்டார்கள். சமயத்தில் அவளது அண்ணனும் அப்பாவும் துப்பாக்கி தேவையான கட்டைகள் வாங்க பக்கத்துக்கு டவுனுக்கு செல்வார்கள். அப்போதெல்லாம் அவளுக்கு துணை அவன்தான். படிக்க சென்று விட்டு அங்கேயே தங்கி விடுவான். ஒரு முறை கனத்த மழை. வீட்டில் அவளும் ராஜுவும் மட்டும் தான் இருந்தனர். தீடிரென மின்னல் வெட்டி டமால் என்று இடி விழுந்த சத்தம் கேட்டு அவள் இவனை இறுக்கமாய் கட்டி கொண்டாள். ராஜு சிரியோ சிரி என சிரித்தான். அவளது பயத்தை அடிக்கடி கேலி பேசினான். இவனுடைய பள்ளி உயிர் தோழன் கோபி இவளை வைத்து கொண்டே மேரியின் பட்ட பெயரை சொல்லி அழைத்து . " கரிச்சான் " "கரிச்சட்டி" என்று கேலி செய்தான். ராஜு அவன் மீது பாய்ந்து சண்டை போட்டு அவனோடு ஒரு வாரம் பேசாமல் விலகி சென்றான். பின்னர் கோபி இவனிடம் வந்து கெஞ்சி இனி அவ்வாறு ஒருபோதும் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்த பிறகு அவனிடம் பேசினான்.
மேரி அவனிடம் என்னை உனக்கு அவ்ளோ பிடிக்குமாடா என்று கேட்க , அவளை பார்க்காது தலையை குனிந்து கொண்டு ஆமாம் என்று தலை ஆட்டினான். மேரி அவனை திருஷ்டி கழித்து சொடக்கு போட்டாள். ராஜுவிற்கு பெருமையாய் இருந்தது. மேரியை யாரும் எதுவும் சொல்லிவிட கூடாது என்பதில் மிகுந்த கவனமாய் இருந்தான். அம்மாவிடம் சொல்லி அவளுக்கு பிடித்த சீடை, முறுக்கு தட்டை எல்லாம் செய்து கொண்டு போய் கொடுப்பான். மேரி அப்போதெல்லாம் வேண்டாம் என்று மறுப்பாள். அப்போது இவன் நிர்மல் அண்ணாவை துணைக்கு அழைப்பான். அவரும் அவன் கொடுப்பதை வாங்கி கொண்டு , சிறிது எடுத்து கொண்டு மிச்சத்தை மேரியிடம் கொடுத்து விடுவார். ராஜு விஷமமாக சிரிப்பான். அவள் ஞாயிறு சர்ச்க்கு செல்வதை பார்க்க அவ்வளவு அழகாய் இருக்கும். ரோஸ் கலர் பூபோட்ட நீண்ட கவுன் போட்டு இருப்பாள் தலைக்கு தூய வெள்ளை மஸ்லின் துணியை சுற்றி கொண்டு இருப்பாள். சில சமயம் இவனும் அவளுடன் சர்ச்க்கு செல்வான். அவளை மிதி வண்டியில் வைத்து கொண்டு செல்லும்போது இவனுக்குள் உற்சாகம் சிறகடிக்கும். மிகவும் சந்தோஷ தருணங்கள் அவனுக்கு அதுவாக தான் இருக்கும். ஒருமுறை அவளது அப்பாவும் அண்ணாவும் பக்கத்துக்கு ஊருக்கு சென்றிருந்த நேரம், எப்போதும் போல் அவன் அவள் வீட்டிற்கு வந்தான். அன்று பார்க்கும் போது மேரி மிக அழகாய் தோன்றுவதாய்
தெரிந்தது. பாடங்கள் படித்து முடித்த பின்பு, எப்போதும் படுத்தவுடன் தூங்கி விடும் ராஜுவிற்கு தூக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்தான். அவளை இடித்து கொண்டே இருந்தான். அவள் இவன் பக்கம் திரும்பி படுத்தாள். ஏதாவது சொல்லேன், தூக்கம் வரல என்றான் ராஜு, மேரி குளுக் என்று சிரித்தாள், என்றும் இல்லாமல் அவள் மீது புதிய வாசனையை உணர்ந்தான் ராஜு. அதை அவளிடமே கேட்டான். அவள் ஏதேதோ சொல்லி விட்டு திரும்பி படுத்தாள். அவளை கட்டாய படுத்தி அதற்கு விளக்கம் கேட்டான். மேரி பதில் ஏதும் சொல்லாமல் படுத்து விட்டாள். சிறிது நேரம் கழித்து தன் மீது ஏதோ ஊர்வதை போல் உணர்ந்தான் ராஜு. யாரோ தன்னை கட்டி அணைப்பதை அவனால் அறிய முடிந்தது , தனக்குள் ஏதோ ஒரு மாறுதல் நிகழ்வதை அவனால் உணர முடிந்தது. ராஜு விடிந்ததும் வேகமாய் வீட்டிற்கு சென்று விட்டான். அவனால் மேரியின் முகத்தை பார்க்க பிடிக்கவில்லையோ இல்லை தைரியம் இல்லையோ அவளை தவிர்த்து வந்தான். அது தான் அவன் செய்த மிக பெரிய தவறு என்பதை வரும் நாளில் தெரிந்து கொண்டான். அவளிடம் பாடம் படிப்பதையும் நிறுத்தி விட்டான். மேரிக்கு அவ்வ போது தமிழ் பாடத்தில் வரும் சந்தேகமெல்லாம் இவன் தான் தீர்த்து வைப்பான்.இப்போது அதுவும் நின்று போனது. இப்போதெல்லாம் அவன் மேரி வீட்டிற்கு செல்வதை பாதியாய் குறைத்து விட்டான். அம்மா கேட்ட போது ஏதோ சொல்லி சமாளித்தான். முழு ஆண்டு தேர்வும் வந்தது . பரீட்சை காரணமாய் அவளை சுத்தமாய் மறந்தே போனான். அன்று கடைசி பரீட்சை முடித்து விட்டு வரும்போது எதிரில் மேரி வந்து கொண்டு இருந்தாள், ராஜுவிற்கு சங்கடமாய் இருந்தது , மேரி இவனை பார்த்து கொண்டே வந்தாள் , அவள் அருகில் வர வர இவனுக்கு இதய துடிப்பு அதிகமானது, எப்போதும் அவளை பார்த்தாள் சுவாதீனமாய் சிரிப்பான், ஆனால் அன்று சிரிப்பை கட்டாய படுத்தி வரவழைத்தான் , ஏண்டா, என் மீது உனக்கு இவ்வளவு கோவம்? என்னை இப்பெல்லாம் சுத்தமா பாக்கறது இல்ல, படிக்க வரதில்லை? என்னடா ஆச்சு உனக்கு என்று கேட்டாள். இன்னும் சிறிது அழுத்தி கேட்டால் அழுதே இருப்பான் ராஜு, எதுவா இருந்தாலும் பேசி இருக்கலாமே என்று கேட்டாள். இவனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை, வார்த்தைகளை மென்று விழுங்கினான்.
அவனுக்குள் இருந்த இன்னொரு ராஜுவை அவனுக்கே அடையாளம் காட்டியது அவள் தான். இருந்த போதும் அவனுக்கு அது ஏனோ பிடிக்காமல் போனது. தலையை குனிந்து கொண்டு இருந்த ராஜுவின் தாடையை பிடித்து தூக்கி பார்த்தாள் , ராஜு கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர், பதறி போனாள் மேரி, ஏண்டா அழறே நான் ஏதாவது தப்பு செய்து விட்டேனா என்றாள். ராஜு பதில் சொல்ல தெரியாது தலையை திருப்பி கொண்டான். மேரி "ப்ளீஸ் சொல்லுடா" மனசுக்கு கஷ்டமா இருக்குடா என்றாள். ராஜு, அப்படி எல்லாம் ஒண்ணும் இல்ல, வீட்ல கொஞ்சம் வேலை என்றான் எங்கோ பார்த்து கொண்டு, அவ்வளவு பெரிய ஆள் ஆயிட்ட அப்படிதானே என்றாள். இல்ல மேரி அப்பா இப்போஎல்லாம் பூஜை பண்ண பூ பறிச்சிட்டு வர சொல்லுறார், நான் தான் போக வேண்டி இருக்கு என்றான். மேரி பதிலேதும் சொல்லாமல் சென்று விட்டாள்.
அவள் போவதை பார்த்து கொண்டு இருந்த ராஜு மனதிற்குள் ஏதோ சொல்லிக்கொண்டு சென்றான்.
அன்று பரீட்சை முடிவுகள் வந்திருந்தன . ராஜு வேக வேகமாக நாளிதழ் அலுவலகம் சென்று பேப்பர் வாங்கி கொண்டு வந்தான் . வரும் போதே மேரி வீட்டருகே கும்பலாய் தெரிந்தது , மனம் கலவரப்பட்டது, பேப்பர் எடுத்துக்கொண்டு அனைவரையும் விலக்கி கொண்டு உள்ளே சென்றான். அங்கே அவன் கண்ட காட்சி அவன் வாழ்வில் ஒருபோதும் பார்க்க போவதில்லை. மேரியை நடு வீட்டில் கிடத்தி இருந்தார்கள். தலை மாட்டில் இவன் ஆசை ஆசையாய் வாங்கி தந்த மெழுகு ஸ்டான்ட் வைக்க பட்டு எரிந்து கொண்டிருந்தது. அவள் தேர்வாகி விட்டதை சொல்ல வந்த அவனுக்கு இது பேரிடியாய் இருந்தது.
எதற்கும் எப்போதும் அவன் அழுததில்லை என அவன் அம்மா மேரியிடம் கூறுவாள். அப்போதெல்லாம் மேரி இவனை பார்த்து ஏண்டா நான் சட்னு போயிட்டா எனக்காக அழமாட்டியா என்பாள். ராஜு பைத்தியம் மாதிரி பேசாதே என்பான்.
பெரும் குரல் எடுத்து இவன் அழுவதை பார்த்த நிர்மல் இவனை வந்து கட்டி கொண்டான். அவனுக்கு மேரி அவனை கட்டி கொண்டது தான் நினைவுக்கு வந்தது.......
No comments:
Post a Comment