புரிதல் சுகம்....
சாம் அலுவலகத்தில் இருந்து கிளம்பி கொண்டு இருந்தான். பன்னாட்டு நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிகிறான். புதிதாய் திருமணமான ஜோடி. மனைவி லீனா பட்டதாரி ஆனால் வேலை பார்க்கவில்லை. சாம் அவளை கட்டாய படுத்தவும் இல்லை. சாம் வீட்டிற்கு ஒரே பிள்ளை அம்மாவும் அப்பாவும் சொந்த ஊரை விட்டு வர மனம் இல்லாமல் அங்கேயே தங்கி விட்டனர். இவர்கள் மட்டும் வேலை நிமித்தமாய் பெங்களூர் வந்து இருந்தனர்.
சாம் அடிப்படையில் மிக மிக அன்பானவன். நெடிதுயர்ந்த நெட்டிலிங்க மரம் போல் வளர்ந்த தேகம்
கூர்மையான கண்கள். எடுப்பான நாசி. மீசை இல்லாத அவன் முகத்தில் அப்படியே பால்ய முக தோற்றம் .
அசப்பில் கொஞ்சம் அஜித் மற்றும் ஆர்யா இருவரையும் கலந்து செய்த உருவமாய் தெரிவான்.
அதிகம் பேச மாட்டான். கல்யாணம் என்று பேச்சு எடுத்த உடன தீர்மானமாய் சொல்லி விட்டான் நல்ல குணமுள்ள பெண்ணாக இருக்கவேண்டும் என்றும் பணம் , படிப்பு எல்லாம் ரெண்டாம் பட்சம் தான் என்று..
அதே போல் பார்த்து பார்த்து தான் லீனாவை அவனுக்கு மணமுடித்தார்கள் பெற்றோர். திருமணம் முடிந்து இன்றோடு 6 மாதம் ஆகிறது இதுவரை இவன் விரல் கூட அவள் மீது தெரியாமல் பட்டது இல்லை.
ஆச்சர்ய பட வேண்டாம். அவளுக்கு இஷ்டம் இல்லாமல் அவளை தொடுவதற்கு கூட தயங்கினான்.
கல்யாணம் ஆகாமலே ஆண் பென் இருவரும் காமுறும் இந்த வேளையில் தன் மனைவிக்கு பிடித்தமாய் இருப்பது தான் நல்ல தாம்பத்தியம் என்று அடிக்கடி கூறுவான்.
எவன் ஒருவன் கட்டிய மனைவியை சந்தோசமாய் வைத்து கொள்கிறானோ அவன் இறந்து சொர்கத்திற்கு செல்வான் என்பான். ஞாயிறு தவறாமல் சர்ச்சுக்கு செல்வான். முக்கியமாய் கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்து பாடல் பாடி வீடு வீடாய் சென்று வருவான். சில சமயம் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டு குழந்தைகளுக்கு பரிசு கொடுப்பான்.
சாம் வீட்டிற்கு வந்தால் பெல் அடிக்க மாட்டான். ஒரு ஐந்து நிமிடம் காத்திருந்து பின் அவனே கதவை திறந்து உள்ளே சென்று விடுவான். இன்றும் அப்படி தான் செய்தான். லீனா சோபாவில் உக்கார்ந்து இருந்தாள் சிநேகமாய் இவனை பார்த்து சிரித்தாள். சாம் தானும் வந்து சோபாவில் அமர்ந்தான். டிவியில்
பாட்டு ஓடி கொண்டு இருந்தது. லீனா காபி எடுத்து வருவதாக எழுந்தாள். சாம் அவளை அமர சொல்லிவிட்டு டிவியை ஆப் செய்தான் . உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் என்றான். அவள் கேள்வி குறியோடு அவனை பார்த்தாள் . சாம் தொண்டையை செருமி கொண்டு இன்று அவனது வீட்டில் இருந்து தொலைபேசி வந்ததாகவும் , கல்யாணம் ஆகி இத்தனை மாதங்கள் போயும் ஏதும் விசேசம் இல்லையா என்று அம்மாவும் அப்பாவும் கேட்டதை அவளிடம் பகிர்ந்து கொண்டான்.
உன்னுடைய விருப்பம் என்ன ? என்று கேட்டவுடன் லீனாவிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
உங்கள் விருப்பம் தான் என் விருப்பம் என்று மட்டும் கூறினாள். சாம் அதை ஒத்துக்கொள்ளவில்லை.
உன்னுடைய சம்மதம் எனக்கு முக்கியம் . உன்னுடைய சம்மதம் இல்லாமல் நான் எதுவும் செய்யமாட்டேன் என்று கூறினான். லீனா மெலிதாய் சிரித்தாள் . பின் அவனை பார்த்து நான் எப்போதும் வேண்டாம் என்று சொல்லிவிட்டால்? அதுவும் எனக்கு சம்மதம் என்றான் அவள் கூறி முடிக்குமுன்பே.
என்னை மட்டும் கேட்டீங்களே , உங்களுக்கு மட்டும் விருப்பம் இல்லையா என்றாள். சாம் இப்போது அவளை நேராக பார்த்து சொன்னான். தாம்பத்தியம் என்பது சங்கீதம் . வீணை வாசிக்கும் போது அந்த வீணையின் நாண்கள் கையை கிழிக்காது வாசிப்பது எப்படியோ அதை போல தான் . உனக்கு பிடிக்காத ஒன்றை செய்ய தலைபட்டால் உன் மனது நிச்சயம் காய படும் . அதை நான் விரும்பவில்லை என்றான். லீனா அவனை இழுத்து அணைத்து கொண்டாள். எனக்கு மிகவும் பெருமையாய் இருக்கு . என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் உங்கள் மனம் கோனாதவாறு நிச்சயம் நானும் முயற்சி செய்வேன் என்றாள். மீண்டும் அங்கு டிவியில் பாடல் ஒலித்தது. "உறவுகள் தொடர்கதை...உணர்வுகள் சிறுகதை" ஒருகதை இன்று முடியலாம்.. முடிவிலும் ஒன்று தொடங்கலாம்... இனியெல்லாம் சுகமே...
No comments:
Post a Comment