எங்கள் வீட்டில் எந்த ஒரு விசேசம் என்றால் வீடே திருவிழா மாதிரி தான், காரணம் எங்கள் வீட்டின் எண்ணிக்கை அப்படி. எனது நண்பன் சொன்ன ஒரு கமெண்ட். "இந்த தொகுதி கவுன்சிலர் தேர்தல் உங்க வீட்ல இருக்குறவங்க வோட் போட்டா போதும் போல" அதே போல இன்னொரு நண்பன் "ஒரே வீட்டுல இவ்வளவு பேரு இருந்தா அப்புறம் ஜனத்தொகை என் எகுராது" இப்படி பல பெருமைகளை கொண்டு இருந்த போதிலும் , எங்கள் வீட்டில் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் சில சமயம் சினிமாவை மிஞ்சியும் கலை கட்டும். அப்படி ஒரு காமெடி கலாட்டவை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பேரு உவகை கொள்கிறேன்....
எங்கள் அண்ணாவின் கல்யாணம் முடிந்த தருணம் அது, எல்லோரும் அவர் அவர் ஊருக்கு செல்வதற்கு ஆயத்தமானார்கள் , இதில் என்ன காமெடி இருக்க போகிறது என்று தானே நினைக்கிறீர்கள் , மேல படிங்க ..
அனைவரையும் அனுப்ப வேண்டிய பொறுப்பு எனக்கு இருந்தது , ஆகையால் எல்லோருக்கும் கார் அனுப்பி கொண்டு இருந்தேன்
ஒரு வழியாய் அனைவரையும் அனுப்பியும் விட்டேன். கடைசியாக எனது மதுரை அண்ணா வீட்டிற்கு வந்து கிளம்பி செல்வதை சொன்னார் , அதன் படியே வீட்டிற்கு எல்லாவற்றையும் மூட்டை கட்டி கொண்டு வந்து சேர்ந்தாயிற்று.
அன்றைய நாள் நன்றாகவே கழிந்தது. எல்லோரும் சேர்ந்து கடற்கரை போனோம். அங்கும் நல்ல கூட்டம் தான்... எல்லோரும் சேர்ந்து குழைந்தையோடு குழந்தையாகி செம லூட்டி அடித்தோம்.
மதுரை அண்ணா ஊருக்கு கிளம்பி கொண்டு இருந்தார். அப்போது எனது அக்காவின் மகன் பேரு சதீஷ், என்னிடம் அவசரமாக வந்தான் , தானும் என்னுடன் வருவதாய் கூறினான். அண்ணா , அண்ணி மற்றும் குழந்தைகளை எக்மோர் ஸ்டேஷன் இறக்கி விட்டு விட்டு அவனை அம்பத்தூரில் உள்ள அவனது அக்கா வீட்டிற்கு செல்வதற்கு சென்ட்ரல் ஸ்டேஷன் இறக்கி விடும் படி கேட்டு கொண்டான். கார் தானே சுமக்க போகிறது, நம்மளா சுமக்க போறோம் ,சரி அதுக்கென்னடா வாடா என்று கூறி விட்டு, உடனே அவனுக்கு செக் வைத்தேன், இங்க பாரு, அண்ணா , அண்ணி , குழந்தைகளை எக்மோர் ல விட்டுட்டு அப்புறம் தான் சென்ட்ரல் போறோம் என்றேன் , எனது புத்திசாலி தனத்தை நான் மெச்சிக்கொண்டேன் எனக்குள், அதற்கு அவன் இடமே கொடுக்கவில்லை என்ன மாம்ஸ் , பெரிய மாமா ஊருக்கு போறாங்க அவங்க தானே முக்கியம், முடிஞ்சா விடுங்க இல்லைனா நானு பஸ் பிடிச்சி போய்க்கிறேன் அப்டின்னு பொக்ரான் போட்டான். இவன் வந்தா நமக்கு கொஞ்சம் டைம் பாஸ் ஆகுமேன்னு அவசர பட்டு பேசிட்டோமோ என்று என்னை நானே நொந்து கொண்டு, சரிடா நீ சொல்லுறதும் சரிதான் என்று சமாளிப்ஸ் செய்து விட்டு எக்மோர் கிளம்பினோம் . எங்கள் வீடு இருந்த இடம் ஆழ்வார்திருநகர் ... அனைவரும் அறிந்த இடம் தான் என்ன ஒரு சிக்கல்னா கோடம்பாக்கம் டூ போரூர் வரை சாலை மிக குறுகிய சாலை... தேவை இல்லாத இடங்களில் எத்தைனையோ பாலங்கள் கட்டிய அரசு முதலில் இங்கு கட்டி இருக்கலாம் . ஒரு பஸ் நின்னா அதற்கு பின்னால் புகை வண்டி பிரயாணம் போல் அனைத்து வண்டிகளும் நின்று விடும் ..இதற்கு இடம் பற்றாக்குறை அல்ல காரணம் , மொத்த இடத்தையும் தனியார் வியாபாரிகள் சுவாஹா பண்ணிவிட்டதால் (சாலை வரை நீட்டித்து) இட பற்றா குறையால் அனைவருமே அல்லல் பட வேண்டிய கட்டாயம் . நாங்கள் எவ்வளவோ சீக்கிரம் கிளம்பியும் , அன்று ஏதோ ஒரு ஊர்வலம் வேறு., அனைத்தையும் தாண்டி எக்மோர் சென்று சேரும் சமயம் ஏறத்தாழ வண்டி புறப்பட சில நிமிடங்களே இருந்தன, ஸ்டேஷன் போகும் அவசரத்தில் நடை பயண சீட்டு வாங்க மறந்து விட்டேன். அவர்களை சரியான பெட்டி பார்த்து ஏற்றி விட்ட பிறகு இவன் காதில் நான் கிசு கிசுத்தேன் .டேய் மாப்ஸ் வந்த அவசரத்துல நடை பயண சீட்டு வாங்கலடா, வண்டி கிளம்புற முன்னால கிளம்பிட்ட பிரச்சனை இல்ல என்றேன், அதை கேட்ட மாத்திரத்தில் அவன் முகாம் பிரகாசம் ஆனது, மாம்ஸ் நீங்க சொல்லுறதும் சரிதான், சரி வாங்க போகலாம் என்று கூறி, விடைபெற்று கொண்டு வெளியே வந்து விட்டோம், எனது மனதிற்குள் ஏதோ ஒரு கோடி பணத்தை சேமித்து விட்டதாக அற்ப சந்தோசம் வேறு, வெளியே வந்து பார்க்கும்போது எங்கள் வண்டியின் டிரைவரை காண வில்லை ,அவனை தேடி வந்து கொண்டு இருக்கும்போது தேனினும் இனிய குரல் ஒலித்தது. 2 பிளாட்போறம் இருந்து வைகை இப்போது கிளம்ப போகிறது என்று ஒலி பெருக்கியில் வந்த அந்த குயிலின் ஓசை கேட்டு , அதுவரை காரசாரமாக பேசி என்னுடன் வந்து கொண்டு இருந்த என்னுடைய மாப்ஸ் சட்டென ஸ்டேஷன் நோக்கி ஓட ஆரம்பித்தான், எனக்கு ஒன்றும் புரியவில்லை, ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது, ஏதோ வில்லங்கமா பண்ண போறான் என்று ! அவனை துரத்தி கொண்டு நானும் ஓடினேன்... அவன் பாய்ச்சலாக ஓடினான், வேகமாய் ஓடியவன் ஒவ்வொரு பெட்டியாக பார்த்து கொண்டு, எனது அண்ணா & குரூப் பெட்டி வந்த உடன இரண்டு கைகளையும் அகல விரித்து டாட்டா காட்டி கொண்டு இருந்தான். எதற்கு அவ்வளவு அவரசரமாக வெளியோ வந்தோமோ அதற்கு வேலையே இல்லாமல் சுளுவாக மீன் தூண்டில் புழுவுக்கு ஆசை பட்டு மாட்டி கொள்ளுமே , அதை போல் வலிய சென்று குரங்கு தனக்கு தானே ஆப்பு வைத்து கொண்டதை போல் வைத்து கொண்டான். இவனுடைய சிறுபிள்ளை தனத்தை நினைத்து எனக்கு சிரிப்பதா அல்லது கோவ படுவதா என்று யோசிக்கும்போதே, வண்டி சென்று விட்டது, பெரிய சாதனை செய்தது போல் வந்து கொண்டு இருந்தான் என்னுடைய மாப்ஸ் , வாசலில் ஈட்டி காரனாய் டிக்கெட் செக்கர் இருந்தார், இவனிடம் நடவு சீட்டு கேட்டார் இவன் அவரிடம் அவனுக்கு தெரிந்த ஆங்கிலத்தில் "I am working for railways" என்று ஒரே போடாய் போட்டான், அவர் சற்றும் சளைக்காமல் குரல் உயர்த்தி "What" என்றார் . உடனே இவன் குரல் பம்மியது, "My friend is working" என்று குரல் கம்மா சொன்னான். அதோடு இல்லாமல் வெளியே நின்று கொண்டு இருந்த என்னை பார்த்து "மாம்ஸ்" என்று அபய குரல் கொடுத்தான், அவர் ரெண்டு அடிமை சிக்கியதை நினைத்து சந்தோஷ பட்டார், அவரிடம் சென்று என்னை பற்றி விளக்கி விட்டு, பின்னர், அவசரமாய் வந்ததை அவருக்கு உணர்த்தி விட்டு அவனை மீட்டு வந்தேன், இப்போது நினைத்தாலும் வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பு வரும், கொஞ்சம் இதை உருவாக படுத்தி பாருங்களேன். அதற்கு பிறகு நடந்த எங்கள் வீட்டு விசேசம் அனைத்திலும் அவன் தான் நாயகன் .. ஆனால் காமெடி நாயகன் ...இன்றும் எங்கள் வீட்டில் அதை கேட்டு ரசிக்க ஒரு ரசிக கூட்டமே இருக்கு எனக்கு... இதுக்கு நானு என்னோட அக்க மவன தான் நன்றி சொல்லணும்.
No comments:
Post a Comment